166. உறங்கா நகரம் – சென்னையின் இரவு வாழ்க்கை

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு
உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒருநாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்தத் திருநாள்
– ‘மெட்ராஸ்’ திரைப்படப் பாடல்

எங்கள் ஊரில் எந்நேரமும் இயங்கும் சரவணா டீக்கடை என்றொன்று இருந்தது. இரவிலும் திறந்திருந்த ஒரே கடை அது. பேசி படித்து பயணித்து முடித்த பல இரவுகளில் அங்கு தேநீர் குடித்ததுண்டு. எந்நேரமும் இயங்கும் தூங்கா நகரம் என்று மதுரையை மற்றவர்கள் சொன்னபோது, எங்கள் திருச்சியும் தான் என வாதிட்டு இருக்கிறேன். உண்மையில் உச்சக்கட்ட தகவல் தொடர்புகளுடன் தனியுடைமைகள் நிரம்பி வழியும் இன்றைய அவசர உலகில், கிட்டத்தட்ட எல்லாம் தூங்கா நகரங்கள் தான். நள்ளிரவிற்குப் பின் எழும்பூர் இரயில் நிலையமும் கோயம்பேடு பேருந்து நிலையமும் வெறிச்சோடிப் போனாலும், தலைநகரில் தூங்காமல் இயங்கும் சிலரின் வாழ்க்கை சொல்லும் புத்தகம் இதோ.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: உறங்கா நகரம் – சென்னையின் இரவு வாழ்க்கை
ஆசிரியர்: வெ.நீலகண்டன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம் (http://www.sandhyapublications.com/)
முதல் ஈடு: 2010
பக்கங்கள்: 128
விலை: ரூபாய் 80
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
குங்குமம் வார இதழில் தூங்கா நகரம் என்ற தலைப்பில் வெளிவந்த 27 கட்டுரைகளின் தொகுப்பு. குடுகுடுப்பைக்காரர்கள், இரவுக் காவலாளிகள், போஸ்டர் ஒட்டுபவர்கள், துப்புரவு பணியாளர்கள், சமையற்காரர்கள். துறைமுகம், காவல், அஞ்சல், இரயில், மருத்துவம், ஊடகம், விமானம், பேருந்து, தீயணைப்பு மற்றும் மின் துறைப் பணியாளர்கள். இப்படி இரவிலும் இயங்குபவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கட்டுரைகள். நீங்களும் படித்துப் பாருங்கள்.

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements