187. OLYMPUS: AN INDIAN RETELLING OF THE GREEK MYTHS

சுஜாதாவைப் படிக்க ஆரம்பித்த காலத்தில் தான் Achilles heel, Oedipus complex போன்ற விடயங்கள் தெரிய வந்தன. Zeus முதலான ஆங்கில மாதங்கள். Jupiter Uranus போன்ற கிரகங்கள். Charon போன்ற துணைக்கோள்கள். Apollo போன்ற செயற்கைகோள்கள். Titan கடிகாரம். உலக வரைபடத்தில் பாரம் தாங்கும் Atlas. கணிதத்தில் Dido பிரச்சனை. Echo கேசட். Olympus கேமரா. கேனான் கேமராவின் Eos வரிசை மாடல்கள். Eros சினிமா நிறுவனம். வைரஸ்களைக் குறிக்கும் Trojan Horse. Europe. Olympics. Athens. Hercules சைக்கிள். Odyssey கடைகள். இந்திய அரசியலமைப்பின் ஒரு பிரிவை அசைத்துப் பார்த்த Minerva மில்ஸ். சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் Midas அரசன். Psycheகாலஜி. Paris. பறக்கும் குதிரை Pegasus. கீழ்த்திசை நாடுகளின் புயலான Typhon. Pisa சாய்ந்த கோபுரம். என் சிறுகதை ஒன்றில் நான் பயன்படுத்திய Cyclopent மருந்து. இப்படி நம்மைச் சுற்றி இருக்கும் சாதாரண பல விடயங்களின் மூலம் கிரேக்கத்தில் இருக்கிறது. நீங்களும் படித்துப் பாருங்கள்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: OLYMPUS: AN INDIAN RETELLING OF THE GREEK MYTHS
ஆசிரியர்: Devdutt Pattanaik
வெளியீடு: Penguin
முதல் ஈடு: 2016
பக்கங்கள்: 265
விலை: ரூபாய் 499
வாங்கிய இடம்: Landmark
————————————————————————————————————————————————————————————————————————————
வானவில்லின் மறுபாதி எங்கே? இறந்தவர்கள் நெற்றில் காசு வைக்கும் பழக்கம் எப்படி வந்தது? பறவைகள் மாலையில் ஏன் மேற்கு நோக்கிப் பறக்கின்றன? லிங்கமான சிவனுக்குப் பிரதமரே வந்து திறந்து வைக்கும் அளவிற்கு, சடைமுடி பாம்புடன் மனித உருவம் கொடுத்தது யார்? பேயோட்டுகிறவன் கைக்கு மயிலிறகு எப்படி வந்தது? முதல் ஆணுறைக்கான தேவை என்ன? உடலுறவில் அதிகம் இன்புறுவது ஆணா பெண்ணா? மிதக்கும் கற்கள் காண இராமேஸ்வரம் கடலுக்கு மக்கள் போகிறார்களே, இயற்கையில் மிதக்கும் கல் என்று ஒன்று வேறு எங்காவது உண்டா?

இன்றைய பீகாரில் இருந்த அன்றைய பாடலிபுத்திரத்திற்குப் போன மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கப் பயணி, ‘இது என்னடா இது? எங்க ஊரு சாமிய இந்த மக்கள் கும்பிடுகிறார்கள்!’ என வியந்தெழுதிய குறிப்பு, இன்றும் உள்ளது. எந்தக் கடவுளில் இருந்து எந்தக் கடவுளை எப்படி எல்லாம் காப்பி அடித்தார்கள் என்பதை அறியவும், அப்படி காப்பி அடித்துப் பாஸாகிக் கொண்டிருக்கும் கடவுளர்களுக்காகவா நம் தேசம் மதவெறி பிடித்து அலைகிறது என நொந்து கொள்ளவும் இப்புத்தகம் படித்துப் பாருங்கள்.

ஹெர்குலீஸ். ஹெர் குல் ஈஸ். ஹரி குல ஈசா! ஸ்வாஹா!!!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements