Category Archive: ஞானசேகர்

210. காவல் கோட்டம்

by

காவல் கோட்டம். 2011ல் சாகித்ய அகடெமி விருது பெற்ற நூல். அரவான் திரைப்படத்தின் சில பகுதிகள் இப்புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அக்காலத்தில் நான் புதினங்கள் அதிகம் படிப்பதில்லை என்பதாலும், இந்தியாவில் பதவிகள் விருதுகள் போன்ற அங்கீகாரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதாலும், அப்போது நான் மதித்த ஒரு… Continue reading

209. ANCIENT ANGKOR

by

இத்தளத்தின் விலையுயர்ந்த புத்தகம் என முந்தைய புத்தகத்தில் எழுதினேன். ஆனால் நான் வாங்கிப் படித்த விலையுயர்ந்த புத்தகம் அதுவல்ல. கம்போடியா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள அங்கோர் வாட் கோவிலைப் பார்க்க வேண்டுமென நான் வாங்கிப் படித்த இப்புத்தகம் தான் அது. அப்பயணம் முடித்து வந்தபின், புகைப்படங்களை… Continue reading

208. THE BETTER HALF

by

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமடா! ஊர் சுற்ற தனியாக நான் பல நாடுகள் பயணித்தாலும், வேலை காரணமாக இதுவரை இரு நகரங்களுக்குத் தான் வெளிநாடு போயிருக்கிறேன். ஹாங்காங் மற்றும் மெல்பேர்ன். இரண்டும் இன்னும் ட்ராம் ஓடும் நகரங்கள். இரண்டும் பொன்னாக முட்டையிடும் வாத்துகள்.… Continue reading

207. MURDER ON THE ORIENT EXPRESS

by

புனே நகரில் பரிகார் ஜவுக் என்றொரு சாலைகளின் சந்திப்பு உண்டு. அதன் வடக்கு மூலையில், ஓவ்வொரு சனிக்கிழமை மாலையும் ஒரு பாட்டி சாலையோரம் புத்தகக் கடை இடுவாள். அப்பகுதியில் நான் வசித்த ஈராண்டுகளில் நானும் எனது நண்பன் ஷங்கரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு சென்றுவிடுவோம். எங்களைப்… Continue reading

206. THE MOST PERFECT THING

by

பெங்களூரூ நண்பன் ஒருவனிடம் பேசும்போது, கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் கோதுமை மாவும், உருளைக் கிழங்கும் நிறைய வாங்கி வைத்துக் கொண்டதாகச் சொன்னான். ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில், தனியாக ஒரு தீவில் மாட்டிக் கொள்ளும் ஒருவன், கிழங்குகளை மட்டுமே தின்று உயிர்வாழ்ந்த கதையை உதாரணமாகச் சொன்னான்.… Continue reading

205. THE ICE CHILD

by

சென்னை நகரில் நான் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஒரு பாதியை இன்னொரு புத்தகத்தில் சொல்லி இருந்தேன். இதுதான் இன்னொரு பாதி. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் ஆங்கிலத்தில்… Continue reading

204. உணவு சரித்திரம் – 2

by

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருப்பதில்லை என்பார்கள். அப்படி சும்மா இருக்க முடியாமல் இந்த ஊரடங்கு காலத்தில் பொது வெளியில் சிலர் செய்யும் சில செயல்கள் மிகவும் கொடுமை. பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. தன் இருப்பைக் காட்டிக் கொள்ள,… Continue reading

203. THE Whispering WALL

by

நானும் சேரலாதனும் ஒருமுறை பேருந்தில் நின்றுகொண்டே பயணித்த போது, இவன்: ஆண்? அவன்: ஆமாம் இவன்: இறந்துட்டார்? அவன்: ஆமாம் இவன்: ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்? அவன்: ஆமாம் இவன்: இயல்பான மரணம்? அவன்: ….. இவன்: இந்தியர்? அவன்: இல்லை இவன்: கிபி? அவன்:… Continue reading

202. The Devil’s Cloth

by

இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே. – விவிலியம் (லேவியாகமம் 19:19) தெனாலி திரைப்படத்தில் அவருக்கு இருக்கும் பயங்களை வரிசையாகப் பட்டியலிடுவார் கமலஹாசன். Phobia என்று இணையத்தில் தேடினால் பல விசித்திர பயங்களைக் கண்டு நீங்களே பயப்படக்கூடும். இருட்டு உயரம் என மரபணு மூலம்… Continue reading

201. Memories of My Melancholy Whores

by

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்ற அதிவுன்னத கதைசொல்லியின் இன்னொரு புத்தகம். அவரின் கடைசி புதினம் என நினைக்கிறேன். தனது 90வது பிறந்தநாளைக் கன்னி கழியாத ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு கொண்டாட விரும்பும், பெயர் சொல்லப்படாத ஒரு பத்திரிக்கையாளனின் கதையிது. விபச்சாரத்தை ஊக்குவிக்கும் புத்தகம் என… Continue reading

200. Koala

by

உலகமெங்கும் உள்ள நாடற்ற, நாடிருந்தும் காடற்ற, காடிருந்தும் கூடற்ற மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் இந்த இருநூறாவது புத்தகம் யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆர்.எஸ்.பதி. என்ற பெயரில் வந்த மருந்து, தலைவலிக்குத் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். யூகலிப்டஸ் என்றால் எங்கள் ஊர் பகுதிகளில் யாருக்கும்… Continue reading

199. புல்வெளி தேசம்

by

எனது மிக நீண்ட பயணமாக ஒரு கிழக்காசிய நாட்டின் ஆறு நகரங்களைப் பதினொரு நாட்களில் சுற்றிவர திட்டங்களைத் தீட்டி தயாராக இருந்தேன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை என்கண் விடச்சொல்லி, அலுவலகத்தில் இருந்து அவசரமாக என்னை ஆஸ்திரேலியா போகச் சொன்னார்கள். மிக நீண்ட… Continue reading

198. கனவு வெளிப் பயணம்

by

சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் நானாக ஆனதுமில்லை (சமயம் = நேரம், மதம் அல்ல) ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை – மேமாதம் திரைப்படப் பாடல் பெண்களைத் தனியே பயணிக்க அனுமதிக்காத… Continue reading

197. சிவன் சொத்து: பண்பாட்டுச் சின்னம், பன்னாட்டு வணிகம்

by

வல்லுறவுக்கு ஒப்புக்கொள் வாழ்க்கை தருகிறேன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தைத் தெரிந்த ஒரே ஆளான சுக்ரா என்ற அசுரன் நடுவயிற்றுக்குள் நுழைந்து, அந்த அசுரனின் அனுமதியுடன் அவனைக் கொன்று, அந்த அசுரனிடம் இருந்தே தேவர்கள் எப்படி அம்மந்திரத்தைப் பெற்றார்கள் என்ற புராணக் கதையும் எனக்குத் தெரியும். ஒரேயொரு… Continue reading

196. சம்ஸ்காரா

by

யு.ஆர்.அனந்தமூர்த்தி. கன்னட மொழிக்கு ஒரு ஞானபீட விருது வாங்கித் தந்தவர். தற்போதைய இந்தியப் பிரதமர் முதன்முதலில் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, இந்நாடே அழிவுப்பாதையில் பயணிக்கும் என்று கடுமையாக விமர்சித்தவர். அவர் பிரதமரான பின், அவரின் பக்தர்கள் இவரைப் பாகிஸ்தான் போகச்சொல்லி ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பினர். நான்… Continue reading

195. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

by

பொதுவாக சினிமாக்காரர்கள் தொடர்பான மற்றும் பின்னட்டையில் அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை நான் படிப்பதில்லை. ‘அங்காடி தெரு’ இயக்குனர் வசந்தபாலன் பின்னட்டையில் புகழ, ‘உப்பு நாய்கள்’ என்றொரு புதினம். அது உண்டாக்கிப் போன வெறுப்பு, அதன்பிறகு அவர் திரைப்படங்கள் எதையும் பார்க்கவிடவில்லை. இயக்குனர் வெற்றிமாறன் புகழ, ‘வெக்கை’… Continue reading

194. The Autumn of the Patriarch

by

இவ்வளவு கடினப்பட்டு வேறெந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை. இதைப் படிக்க தற்போதைய அறிவு போதாதென்று தாழ்வுணர்ச்சி தென்பட, இரண்டு முறை பாதியிலேயே வேறெந்த புத்தகத்தையும் நிறுத்தி வைத்ததில்லை. இதில் சொல்லப்படும் கருத்துகளை நிகழ்கால மனிதர்கள் சிலர் மேல் எப்போதும் பொருத்திப் பார்த்து பார்த்து, அவர்கள் மேல்… Continue reading

193. கெத்து

by

எனக்கு டிவி பார்க்கும் பழக்கம் கிடையாது. சொந்த ஊருக்குப் போகும்போது மட்டும் பார்ப்பேன். அதிலும் சில குறிப்பான நிகழ்ச்சிகள் மட்டும். நாளைய இயக்குனர் அவற்றில் ஒன்று. அண்மையில் ‘பேசாத பேச்செல்லாம்’ என்றொரு குறும்படம் பார்த்தேன். https://www.youtube.com/watch?v=MaMfO9T_T6Y. நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின் என்னைப் பாதித்த ஒரு குறும்படம்.… Continue reading

192. மதுரை அரசியல்

by

தமிழைக் குடித்த கடலோடு – நான் தழுவேன் என்றே சபதமிட்டே அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர் ஆழி கலப்பது தவிர்ப்பதனால் மானம் எழுதிய மாமதுரை – இது மரபுகள் மாறா வேல்மதுரை! தென்னவன் நீதி பிழைத்ததனால் – அது தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி… Continue reading

191. AN UNCERTAIN GLORY : INDIA AND ITS CONTRADICTIONS

by

(தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா கொல்லப்படுவதற்கு முன், தனது ஆட்சியில் தமிழக சட்டசபையில் மேற்கோள் காட்டி பேசிய புத்தகம் இது) உன் வீட்டு லெட்சணத்தைப் பக்கத்து ஊரில் போய் கேட்டுப் பார். – யாரோ மனைவியின் வேசித்தனம் கணவனுக்குத் தான் கடைசியாகத் தெரியும். – யாராரோ… Continue reading

190. பொன்னியின் செல்வன்

by

மாதொருபாகன் என்று தொடங்கிய பாரம்பரியம், பிறகு வள்ளுவன் சிலை, பெரியார் சிலை, தமிழை ஆண்டாள், சபரிமலை அய்யப்பன் என்று வரிசையாக தொட்டுத் தொடர்ந்து இன்று வந்து நிற்குமிடம் இராசராச சோழன். கிருமி ஒன்றுதான். தாக்கப்படும் உடற்பாகங்கள் தான் வேறு. கடந்தகால மருந்துகளை மறந்து கொண்டே சமூகம்… Continue reading