153. In the light of what we know

by

இரகசியங்கள் சொல்கையில் நான் மிகவும் தடுமாறுகிறேன் உவமானங்களால் சுற்றிச் சுற்றியே பல சமயங்களில் உவமேயங்களை மறந்து விடுகிறேன் ஆடையென உவமான‌ங்களை அவிழ்த்துக் கொண்டு என்னுடனேயே புதைக்கிறது உவமேயங்களை உலகம் உவமேயங்களைப் புரிந்து கொள்ளாமல் உவமானங்களில் பூரித்துப் போகும் உலகம் ஆடையற்றுத் தெரிகிறது சவக்குழியில் இருந்து பார்க்கையில்!… Continue reading

152. பாரதியார் ஆத்திசூடி விளக்கக் கதைகள்

by

(நாளை யாரையோ கொண்டாடக் கட்டாயப்படுத்தப்படும் என் தமிழ்ச் சமூகத்திற்கு, இன்று நம் பாரதியின் பிறந்த நாள் நினைவாக …) ஆத்திச்சூ இது ஆத்திச்சூ இது நியூ வே ஆத்திச்சூடி கூழானாலும் குளிச்சுக் குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு அறம்செய விரும்பு மவனே ஒப்புரவொழுகு ஆத்திச்சூடி டெல்… Continue reading

151. குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?

by

(குற்றவாளிகளை அரசே பாதுகாப்புடன் விமானம் ஏற்றி அனுப்பி வைத்த‌ போபால் விசவாயு கோரத்தின் நினைவுதினம் இன்று. இத்தேசத்தில் நீதி மறுக்கப்பட்ட இன்னுமொரு மக்கள்கூட்டம்) பூகோள நியமத்தில் ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும் நமக்கு இலங்கை போல. – ஆதவன் தீட்சண்யா பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்தளவுக்கு அது… Continue reading

150. The tale of the Duelling Neurosurgeons

by

(உலகில் ஒரே ஒரு தலைசிறந்த பொருள்தான் உள்ளது. அது நம் ஒவ்வொருவ‌ரிடமும் உள்ளது. எல்லாம்வல்ல அந்தப் பரம்பொருளின் நினைவாக‌ இந்த 150வது புத்தகம்) நீ என்பது நீ மட்டுமல்ல‌ மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும் நான் என்பதில் இன்னொரு பாதி யார் என்பதை இதயம்… Continue reading

149. தமிழகத்தில் அடிமைமுறை

by

என்னைக் கருவுற்றிருந்த மசக்கையில் என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர‌ பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது? தடித்த உம் காவிய இதிகாசங்களில் எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை? எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை? – ஆதவன் தீட்சண்யா (‘ஆமென்’… Continue reading

148. The myth of the holy cow (புனிதப்பசு என்னும் புரட்டுக்கதை)

by

(இப்படி நடந்தது, இப்படியே நடக்கிறது, இப்படியும் இனி நடக்கும் என்று சொல்லித் தந்த அம்பேத்கருக்குச் சமர்ப்பணம்) ஆதியிலும் பறையனல்ல‌ சாதியிலும் பறையனல்ல‌ நீதியிலும் பறையனல்லவே – நானே பாதியிலே பறையனானேனே! – அரிச்சந்திர மயான காண்டம் A civilization can be judged by the… Continue reading

147. பண்டையக் கால இந்தியா – ஒரு வரலாற்றுச் சித்திரம்

by

மானமுள்ள‌ அறிவார்ந்த சமூகமாக இம்மண்ணை மாற்ற முதலடி எடுத்துக் கொடுத்த‌ புத்தனுக்குச் சமர்ப்பணம். It is important to bear in mind that political campaigns are designed by the same people who sell toothpaste and cars. – Noam… Continue reading

146. இருநூற்று நாற்பத்து ஐந்து கிராமங்கள் (245 Villages)

by

Huáng Hé river. ஹோவாங்கோ ஆறு. சீன நாகரீகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஆறு. ஆண்டுக்குப் 14 இலட்சம் டன் வண்டலைச் சேற்றுடன் கடல் சேர்ப்பதால், கலங்கிய நீர் கொண்ட ஆறு. இதனால் மஞ்சளாறு என்ற பெயரும் உண்டு. குதிரைக் கொம்பு, கோழி மூத்திரம், மேற்கில் உதயம்… Continue reading

145. நளவெண்பா

by

இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய் வாங்கிக் கொள் வள்ளுவனிடம்! – கவிஞர் அறிவுமதி பதினெட்டாம் நூற்றாண்டில் தாவரங்களை வகைப்பிரித்த கார்ல் லின்னேயஸ், அடர்ந்து உயர்ந்து வளர்ந்தாலும் மூங்கில் மரமல்ல என்று புல் இனத்தில் வைத்தார். உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரமான மூங்கில், ஒருவித்திலை வகை புல்… Continue reading

144. Genes, Peoples and Languages

by

தீட்டென்பவனை நாப்கின் கழற்றி அவன் வாயில் அடி. நினைவிற்கு வரட்டும் அவன் பிறப்பு. – திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் + தயா கவிசிற்பி (என இணையத்தில் படித்தேன்) யாரு மேல‌ கீறினாலும் ரத்தம் ஒண்ணுதான் ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தான் உயிருக்கெல்லாம் ஒரே பாதை… Continue reading

143. Bitter Fruit – The Story of the American Coup in Guatemala

by

World Policy Instituteன் முன்னாள் தலைவர் Stephen Schlesinger. குவாத்தாமாலவின் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்த CIA ஆவணங்களை வெளியிட வைத்தவர். 1977ல் முதன் முறையாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிக் கொணர முயன்றார். அது தோல்வியில் முடிந்த‌ பிறகு வழக்கு தொடுத்தார். அதுவும்… Continue reading

142. கஷ்மீர் (Kashmir)

by

(இத்தளத்தில் இது எனது நூறாவது புத்தகம்ங்கள். காணாமலடிக்கப்பட்டவர்களுக்குச் சமர்ப்பணம்) இன்று செப்டம்பர் 11. தனது செயல்களை நியாயப்படுத்த அமெரிக்கா சுட்டிக்காட்டும் நாள். இலங்கைக்கு ஈழம். கர்நாடகாவிற்குக் காவிரி. கமல்ஹாசன் சொன்னதையும் சேர்த்தால், பாம்புக்கு விடம்; மாட்டுக்குக் கொம்பு; மனிதருக்குப் பொய். இந்தியாவுக்கு இந்தி கிரிக்கெட் பசுமாடு மற்றும்… Continue reading

141. முடிசூடா ராணிகள்

by

பஞ்ச பாண்டவர்கள் பகையை வென்று கொடி நட்டதும் பெண்ணாலே கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே பாண்டிமன்னன் அரண்மனை மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே – திருமதி ஒரு வெகுமதி திரைப்படப் பாடல் (வைரமுத்து என நினைக்கிறேன்) உலகெல்லாம் இராணுவ முகாமிட்டுக் கொண்டு… Continue reading

140. கிறித்தவமும் சாதியும்

by

(மகாகவிக்குச் சமர்ப்பணம்) மரித்தவனைச் சிலுவையில் அறைகின்றன‌ கல்லறைகளின் சாதிச் சுவர்கள். – ஞானசேகர் (இக்கவிதைக்கு நானிட்ட தலைப்பு – புறவினத்தார்) சீனாவில் இருந்து ஒரு புத்தத் துறவி இமயமலை தாண்டி இந்தப்பக்கம் வருகிறார். புதிதாக அரியணை ஏறிய ஒரு சிற்றரசனின் நண்பனாகிறார். மக்கள் படும் கொடுமைகளைக் காணச்… Continue reading

139. குன்னூத்தி நாயம்

by

புத்தகம்: குன்னூத்தி நாயம் ஆசிரியர்: ஹரிகிருஷ்ணன் (http://manalveedu.blogspot.in/) வெளியீடு: எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/) முதல் ஈடு: திசம்பர் 2013 பக்கங்கள்: 142 (உள்ளடகத்தில் பக்க எண்கள் தவறாக இருக்கின்றன. அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளவும்) விலை: ரூபாய் 120 வாங்கிய இடம்: New Book Lands,… Continue reading

138. காஃபிர்களின் கதைகள்

by

புத்தகம்: காஃபிர்களின் கதைகள் தொகுப்பாசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா வெளியீடு: எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/) பக்கங்கள்: 208 விலை: ரூபாய் 160 வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/) காஃபிர்களின் கதைகள். காஃபிர் என்றால் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் அல்லது… Continue reading

137. சோறு போடும் சொற்கள்

by

நீ இன்னும் ரெண்டு மாசத்துல 10,000 ரூவா சம்பாதிச்சுக் காட்டணும். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. பிக்பாக்கெட் அடி. கொள்ளைய‌டி. ஊர் சொத்தத் திருடு. மந்திரியாப் போ. – எஸ்.வி.சேகரின் ‘சாதல் இல்லையேல் காதல்’ நாடகத்திலிருந்து Offer some plums before… Continue reading

136. THE MISSING INK

by

The moving finger writes, and having writ, moves on. – Omar Khayyam புத்தகம்: The Missing Ink – How handwriting made us who we are ஆசிரியர்: Philip Hensher மொழி: ஆங்கிலம் வெளியீடு: Pan books முதல்… Continue reading

135. அஜ்னபி

by

பறந்து வருவதற்குள் பிடித்த சொந்தங்கள் சாம்பலாகிப் போனாலும் வேர்கள் ஊன்றிவிட்டு விழுது பிடித்து திரும்புகையில் சொல்லாத காதலி தாயாகிப் போயிருந்தாலும் இங்கு வந்து பார் – ஞானசேகர் (வைரமுத்து பாணியில் ஒரு ‘தூரத்துத் தமிழன்’ கவிதையிலிருந்து) ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ என்ற புதினம் மூலம் எனக்கு… Continue reading

134. CHRONICLE OF A DEATH FORETOLD

by

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்ற‌ ஓர் உன்னதமான கதைசொல்லியின் மறைவின் நினைவாக Chronicle of a Death Foretold. ஒரு கொலை நடக்கிறது. அக்கொலை பற்றி அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு நபர், மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட சம்பவங்களின் தொகுப்பே இப்புதினம். மேலோட்டமாகப் பார்த்தால்… Continue reading

133. ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை

by

மரக்கிளையில் குழந்தை வரப்பில் பண்ணையார் பயிரில் சிந்துகிறது பால். – கவிஞர் அறிவுமதி குளக்கரையில் தவமிருக்கிறது கொக்கு கலைத்துவிடாதீர்கள் மீன்களே என்ற பிரபலமான ஹைக்கூவை நீங்களும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதை எழுதியவரே இப்புத்தகத்தை எழுதியவர். மு.முருகேஷ். ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பிட்டு, 16.10.1916 அன்று சுதேசமித்திரன்… Continue reading