226. பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

இன்று திருமடைப்பள்ளியில் ஓர் உணவுப்பொருளாக கருப்பட்டி (பனைவெல்லம்) நுழைய அனுமதியில்லை. பஞ்சாமிர்தம் என்ற பெயரிலான பழக்கலவையில் பேரீச்சம்பழமும் ஆப்பிளும் கலக்கின்றன. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பும் உலர்திராட்சையும், புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீகத்தில் இருந்து அறிமுகமான ரோஜா மலரில் இருந்து எடுக்கப்படும் பன்னீர் திருநீராட்டுப் பொருளாகப் பயன்படுகிறது. இவையெல்லாம் இம்மண் சாராப் பொருட்கள். ஆனால் ஏற்கனவே திருமடைப்பள்ளியில் இடம்பெற்றிருந்த இம்மண்ணின் பாரம்பரிய இனிப்பான கருப்பட்டி விலக்கப்பட்ட பொருளாக முத்திரையிடப்பட்டுவிட்டது.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பிராமண போஜனமும் சட்டிச் சோறும் (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முதல் ஈடு: டிசம்பர் 2017
பக்கங்கள்: 76
விலை: 75 ரூபாய்
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி
————————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)