Author Archive

215. சித்தன் போக்கு

by

தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் நான் படித்திராதவர்களில் முக்கியமானவர் பிரபஞ்சன். எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களின் காணொலி ஒன்றில், ‘ஒரு மனுஷி’ என்ற பிரபஞ்சனின் கதையைக் கேட்டேன். அருமையாக இருந்தது. சரி, சிறுகதைகளில் இருந்து பிரபஞ்சனை ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்துவிட்டேன்.————————————————————————————————————————————————————————————————————————————புத்தகம்: சித்தன் போக்குஆசிரியர்: பிரபஞ்சன்வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்முதல்… Continue reading

214. பின் கதைச் சுருக்கம்

by

இப்படியொரு புத்தகம் இருப்பது சென்ற வாரம் வரை எனக்குத் தெரியாது. ஆன்லைனில் நான் பணம் செலுத்தி வாங்கப் போன புத்தகங்களில் ஒன்று இல்லாமல் போக, என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, அதே விலைக்கு நிகராக வேறு புத்தகங்கள் சொல்லச் சொன்னார்கள். அவசரத்தில் நான் சொன்ன புத்தகங்களில்… Continue reading

213. BATTLEGROUND TELANGANA

by

இன்று நவம்பர் ஒன்று. பிரிட்டிஷ் இந்தியாவின் தெலுங்கு பேசும் மக்களும், ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் மக்களும் சேர்க்கப்பட்டு, முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவான நாள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஹைதராபாத் நிஜாம் தான், உலகின் மிகப்பெரிய பணக்காரர். இந்தியாவின் இதயத்தில் இருக்கும்… Continue reading

212. அந்தர மனிதர்கள்

by

கவிஞர் யுகபாரதியின் தெருவாசகம் என்ற கவிதைப் புத்தகம் படித்திருக்கிறீர்களா? நாம் தெருவில் சந்திக்கும் பலவிதமான தொழில்கள் செய்பவர்களைப் பற்றிய கவிதைகள். உங்களிடம் ஒரு பிரதி இல்லை என்றால், கண்டிப்பாக வாங்கி என்னைப் போல் எப்போதும் மேசையில் வைத்துக் கொள்ளுங்கள். மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர்களின்… Continue reading

211. WHEN THE EARTH WAS FLAT

by

Fantasy is nobody’s truth. Myth is somebody’s truth. Science is everybody’s truth.மாதவிலக்கான பெண்கள் ஊருக்கு வெளியே தங்கிக்கொள்ள கர்நாடக அரசு கிராமப்புறங்களில் கட்டடங்கள் கட்டித் தந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். முடியாட்சிகளில் மாதவிலக்கான அந்தப்புர நாயகிகள் தனிமைப்படுத்திக் கொள்ள தனியாகவே அறைகள்… Continue reading

210. காவல் கோட்டம்

by

காவல் கோட்டம். 2011ல் சாகித்ய அகடெமி விருது பெற்ற நூல். அரவான் திரைப்படத்தின் சில பகுதிகள் இப்புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அக்காலத்தில் நான் புதினங்கள் அதிகம் படிப்பதில்லை என்பதாலும், இந்தியாவில் பதவிகள் விருதுகள் போன்ற அங்கீகாரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதாலும், அப்போது நான் மதித்த ஒரு… Continue reading

209. ANCIENT ANGKOR

by

இத்தளத்தின் விலையுயர்ந்த புத்தகம் என முந்தைய புத்தகத்தில் எழுதினேன். ஆனால் நான் வாங்கிப் படித்த விலையுயர்ந்த புத்தகம் அதுவல்ல. கம்போடியா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள அங்கோர் வாட் கோவிலைப் பார்க்க வேண்டுமென நான் வாங்கிப் படித்த இப்புத்தகம் தான் அது. அப்பயணம் முடித்து வந்தபின், புகைப்படங்களை… Continue reading

208. THE BETTER HALF

by

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமடா! ஊர் சுற்ற தனியாக நான் பல நாடுகள் பயணித்தாலும், வேலை காரணமாக இதுவரை இரு நகரங்களுக்குத் தான் வெளிநாடு போயிருக்கிறேன். ஹாங்காங் மற்றும் மெல்பேர்ன். இரண்டும் இன்னும் ட்ராம் ஓடும் நகரங்கள். இரண்டும் பொன்னாக முட்டையிடும் வாத்துகள்.… Continue reading

207. MURDER ON THE ORIENT EXPRESS

by

புனே நகரில் பரிகார் ஜவுக் என்றொரு சாலைகளின் சந்திப்பு உண்டு. அதன் வடக்கு மூலையில், ஓவ்வொரு சனிக்கிழமை மாலையும் ஒரு பாட்டி சாலையோரம் புத்தகக் கடை இடுவாள். அப்பகுதியில் நான் வசித்த ஈராண்டுகளில் நானும் எனது நண்பன் ஷங்கரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு சென்றுவிடுவோம். எங்களைப்… Continue reading

206. THE MOST PERFECT THING

by

பெங்களூரூ நண்பன் ஒருவனிடம் பேசும்போது, கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் கோதுமை மாவும், உருளைக் கிழங்கும் நிறைய வாங்கி வைத்துக் கொண்டதாகச் சொன்னான். ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில், தனியாக ஒரு தீவில் மாட்டிக் கொள்ளும் ஒருவன், கிழங்குகளை மட்டுமே தின்று உயிர்வாழ்ந்த கதையை உதாரணமாகச் சொன்னான்.… Continue reading

205. THE ICE CHILD

by

சென்னை நகரில் நான் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஒரு பாதியை இன்னொரு புத்தகத்தில் சொல்லி இருந்தேன். இதுதான் இன்னொரு பாதி. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் ஆங்கிலத்தில்… Continue reading

204. உணவு சரித்திரம் – 2

by

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருப்பதில்லை என்பார்கள். அப்படி சும்மா இருக்க முடியாமல் இந்த ஊரடங்கு காலத்தில் பொது வெளியில் சிலர் செய்யும் சில செயல்கள் மிகவும் கொடுமை. பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. தன் இருப்பைக் காட்டிக் கொள்ள,… Continue reading

203. THE Whispering WALL

by

நானும் சேரலாதனும் ஒருமுறை பேருந்தில் நின்றுகொண்டே பயணித்த போது, இவன்: ஆண்? அவன்: ஆமாம் இவன்: இறந்துட்டார்? அவன்: ஆமாம் இவன்: ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்? அவன்: ஆமாம் இவன்: இயல்பான மரணம்? அவன்: ….. இவன்: இந்தியர்? அவன்: இல்லை இவன்: கிபி? அவன்:… Continue reading

202. The Devil’s Cloth

by

இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே. – விவிலியம் (லேவியாகமம் 19:19) தெனாலி திரைப்படத்தில் அவருக்கு இருக்கும் பயங்களை வரிசையாகப் பட்டியலிடுவார் கமலஹாசன். Phobia என்று இணையத்தில் தேடினால் பல விசித்திர பயங்களைக் கண்டு நீங்களே பயப்படக்கூடும். இருட்டு உயரம் என மரபணு மூலம்… Continue reading

201. Memories of My Melancholy Whores

by

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்ற அதிவுன்னத கதைசொல்லியின் இன்னொரு புத்தகம். அவரின் கடைசி புதினம் என நினைக்கிறேன். தனது 90வது பிறந்தநாளைக் கன்னி கழியாத ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு கொண்டாட விரும்பும், பெயர் சொல்லப்படாத ஒரு பத்திரிக்கையாளனின் கதையிது. விபச்சாரத்தை ஊக்குவிக்கும் புத்தகம் என… Continue reading

200. Koala

by

உலகமெங்கும் உள்ள நாடற்ற, நாடிருந்தும் காடற்ற, காடிருந்தும் கூடற்ற மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் இந்த இருநூறாவது புத்தகம் யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆர்.எஸ்.பதி. என்ற பெயரில் வந்த மருந்து, தலைவலிக்குத் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். யூகலிப்டஸ் என்றால் எங்கள் ஊர் பகுதிகளில் யாருக்கும்… Continue reading

199. புல்வெளி தேசம்

by

எனது மிக நீண்ட பயணமாக ஒரு கிழக்காசிய நாட்டின் ஆறு நகரங்களைப் பதினொரு நாட்களில் சுற்றிவர திட்டங்களைத் தீட்டி தயாராக இருந்தேன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை என்கண் விடச்சொல்லி, அலுவலகத்தில் இருந்து அவசரமாக என்னை ஆஸ்திரேலியா போகச் சொன்னார்கள். மிக நீண்ட… Continue reading

198. கனவு வெளிப் பயணம்

by

சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் நானாக ஆனதுமில்லை (சமயம் = நேரம், மதம் அல்ல) ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை – மேமாதம் திரைப்படப் பாடல் பெண்களைத் தனியே பயணிக்க அனுமதிக்காத… Continue reading

197. சிவன் சொத்து: பண்பாட்டுச் சின்னம், பன்னாட்டு வணிகம்

by

வல்லுறவுக்கு ஒப்புக்கொள் வாழ்க்கை தருகிறேன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தைத் தெரிந்த ஒரே ஆளான சுக்ரா என்ற அசுரன் நடுவயிற்றுக்குள் நுழைந்து, அந்த அசுரனின் அனுமதியுடன் அவனைக் கொன்று, அந்த அசுரனிடம் இருந்தே தேவர்கள் எப்படி அம்மந்திரத்தைப் பெற்றார்கள் என்ற புராணக் கதையும் எனக்குத் தெரியும். ஒரேயொரு… Continue reading

196. சம்ஸ்காரா

by

யு.ஆர்.அனந்தமூர்த்தி. கன்னட மொழிக்கு ஒரு ஞானபீட விருது வாங்கித் தந்தவர். தற்போதைய இந்தியப் பிரதமர் முதன்முதலில் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, இந்நாடே அழிவுப்பாதையில் பயணிக்கும் என்று கடுமையாக விமர்சித்தவர். அவர் பிரதமரான பின், அவரின் பக்தர்கள் இவரைப் பாகிஸ்தான் போகச்சொல்லி ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பினர். நான்… Continue reading

195. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

by

பொதுவாக சினிமாக்காரர்கள் தொடர்பான மற்றும் பின்னட்டையில் அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை நான் படிப்பதில்லை. ‘அங்காடி தெரு’ இயக்குனர் வசந்தபாலன் பின்னட்டையில் புகழ, ‘உப்பு நாய்கள்’ என்றொரு புதினம். அது உண்டாக்கிப் போன வெறுப்பு, அதன்பிறகு அவர் திரைப்படங்கள் எதையும் பார்க்கவிடவில்லை. இயக்குனர் வெற்றிமாறன் புகழ, ‘வெக்கை’… Continue reading