Category Archive: புதினம்

250. தாண்டவராயன் கதை

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 4 நான் படித்த தமிழ்ப் புதினங்களில் தாண்டவராயன் கதை போல் இனிதாவதறியோம். இதுவெறும் புகழ்ச்சியில்லை. உண்மை நண்பர்காள்! அச்சாகும் புதினங்கள் பெரும்பாலும் புராணங்களை மீளுருவாக்கம் செய்கின்றன அல்லது பகடி செய்கின்றன. குடும்பக் கதை சொல்வதாக சாதியைத் தூக்கிப்பிடிக்கின்றன. வரலாற்றின்… Continue reading

246. கொற்கை

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 3 சிங்கப்பூரின் நிலவமைப்பைப் புரிந்து கொள்ள வழிபாட்டுத்தலங்கள் நூலகங்கள் என்று விடுமுறை நாட்களில் சுற்றித் திரிந்தபோது, மொத்தம் 16 நூலகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடித்த புத்தகம் இது. அதாவது 16 தனித்தனி புத்தகங்கள். பத்தாண்டுகளுக்குப் பின் நான்… Continue reading

245. சொர்க்கபுரம்

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 2 இது வயது வந்தவர்களுக்கான புதினம். ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியென சொர்க்கபுரத்தின் வீழ்ச்சி சொல்லும் புதினம் இது. ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழில் புரிபவர்கள் பெரும்பாலும் கதை மாந்தர்களாக அமைந்த புத்தகம் இது. ஆபாசப் படங்களில் பார்க்கும் பெரும்பாலான… Continue reading

240. காதுகள்

by

Oliver Sacks. உங்களுக்கு ஆலிவர் சாக்ஸ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹைதராபாத் நகரின் பழைய புத்தகக் கடைகளில், ஒருமுறை அவரது புத்தகம் ஒன்றைப் பார்த்து வாங்கி வந்தேன். Hallucinations. பிரமைகள். ஒரு கட்டுரை தான் படித்தேன். அப்படியே மூடி வைத்துவிட்டேன். Second year syndrome! படித்தறிய விரும்பும்… Continue reading

238. SHERLOCK HOLMES

by

அந்த வருடம் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும், ஒரு தெலுங்குத் திரைப்படத்திலும் Inspired by என்று தொடங்கினார்கள். இப்படியாக இதுவரை உலகிலேயே அதிகப்படியாக திரைமயமாக்கப்பட்ட கதாப்பாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ். அவ்விரு திரைப்படங்களும் முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தில் துப்பறியும் கதைகள். 100 வருடங்களுக்கு முந்தைய… Continue reading

236. பேட்டை

by

பேட்டை. சிந்தாதிரிப்பேட்டை. சின்னதறிப்பேட்டையில் ரூபன் என்ற கதைநாயகனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே இப்புதினம். இது மத்திய சென்னையின் கதை. அரசியல் சினிமா ரவுடியிசம் என்ற வழக்கமான சென்னை கதையில்லை. கேரம், கானாப்பாட்டு, ஹவுஸிங் யூனிட், அவ்வளவு கெட்ட வார்த்தைகள் என்ற வழக்கமான சென்னை சமாச்சாரங்களும் உண்டு.… Continue reading

233. நிறங்களின் உலகம்

by

புத்தகக் கண்காட்சிகளில் நான் தவிர்க்கும் பதிப்பகங்களில் ஒன்று விகடன். அதையும் மீறி இப்புத்தகம் என் கைகளுக்கு வந்திருந்தாலும், புரட்டிப் பார்த்துவிட்டு, இன்னொரு வெகுஜனப் புத்தகம் என்று புறக்கணித்திருக்க வாய்ப்புண்டு. பதிப்புரை என்னுரை முன்னுரை என்று நண்பர்களை நண்பர்களே புகழ்ந்து கொண்டு, புத்தகங்களின் பக்கங்களை வெறுமனே நிரப்பி,… Continue reading

231. கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

by

உலகக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவாகச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என படித்திருப்பீர்கள். பூச்சியினங்களில் கூட்டுவிழிகள் என்ற அமைப்புண்டு. இவ்விரண்டு விடயங்கள் தான் என்னைக் கடைசிவரை படிக்க வைத்தன. மாய எதார்த்தம், திமிங்கல வேட்டை, மலை குடைதல், மலையேற்றம், பழங்குடிகள், கடல், பிளாஸ்டிக் குப்பைகள் என… Continue reading

227. ELEPHANTS CAN REMEMBER

by

கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன் கணவனும் மனைவியும் நடைப்பயிற்சி சென்றபோது, அவர்களின் சொந்த துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போகிறார்கள். இருவரின் கைரேகைகளும் இருந்ததால், மனமொத்த விவாகம், மனமொத்த விவாகரத்து போல, மனமொத்த தற்கொலை, அதாவது இரட்டைத் தற்கொலை என காவல்துறை முடித்துக் கொள்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் கதாப்பாத்திரத்தில்… Continue reading

221. வானம் வசப்படும்

by

புத்தகம்: வானம் வசப்படும் (புதினம்)ஆசிரியர்: பிரபஞ்சன்வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்முதல் ஈடு: டிசம்பர் 2019பக்கங்கள்: 519விலை: ரூபாய் 500 (நண்பன் சேரலாதன் வாங்கித் தந்தது)வாங்கிய இடம்: சென்னைப் புத்தகக் கண்காட்சி 2021 – ஞானசேகர்(http://jssekar.blogspot.com/)

216. இறவான்

by

இசை. கடவுள். இரண்டிற்கும் இடைபட்ட ஏதோ ஒன்றையும் சொல்லும் புதினம் என்கிறது அட்டைப்படம். உங்களுக்கு இப்புதினம் கிடைத்தால், 280ம் பக்கத்தில் இருந்து நான்கு பக்கங்கள் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அவை பிடித்திருப்பின், இப்புதினம் உங்களைப் போன்றவர்களுக்காக எழுதப்பட்டிருக்கக் கூடும். இது என் போன்றவர்களுக்கான புதினம் இல்லை… Continue reading

214. பின் கதைச் சுருக்கம்

by

இப்படியொரு புத்தகம் இருப்பது சென்ற வாரம் வரை எனக்குத் தெரியாது. ஆன்லைனில் நான் பணம் செலுத்தி வாங்கப் போன புத்தகங்களில் ஒன்று இல்லாமல் போக, என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, அதே விலைக்கு நிகராக வேறு புத்தகங்கள் சொல்லச் சொன்னார்கள். அவசரத்தில் நான் சொன்ன புத்தகங்களில்… Continue reading

210. காவல் கோட்டம்

by

காவல் கோட்டம். 2011ல் சாகித்ய அகடெமி விருது பெற்ற நூல். அரவான் திரைப்படத்தின் சில பகுதிகள் இப்புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அக்காலத்தில் நான் புதினங்கள் அதிகம் படிப்பதில்லை என்பதாலும், இந்தியாவில் பதவிகள் விருதுகள் போன்ற அங்கீகாரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதாலும், அப்போது நான் மதித்த ஒரு… Continue reading

207. MURDER ON THE ORIENT EXPRESS

by

புனே நகரில் பரிகார் ஜவுக் என்றொரு சாலைகளின் சந்திப்பு உண்டு. அதன் வடக்கு மூலையில், ஓவ்வொரு சனிக்கிழமை மாலையும் ஒரு பாட்டி சாலையோரம் புத்தகக் கடை இடுவாள். அப்பகுதியில் நான் வசித்த ஈராண்டுகளில் நானும் எனது நண்பன் ஷங்கரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு சென்றுவிடுவோம். எங்களைப்… Continue reading

205. THE ICE CHILD

by

சென்னை நகரில் நான் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஒரு பாதியை இன்னொரு புத்தகத்தில் சொல்லி இருந்தேன். இதுதான் இன்னொரு பாதி. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் ஆங்கிலத்தில்… Continue reading

203. THE Whispering WALL

by

நானும் சேரலாதனும் ஒருமுறை பேருந்தில் நின்றுகொண்டே பயணித்த போது, இவன்: ஆண்? அவன்: ஆமாம் இவன்: இறந்துட்டார்? அவன்: ஆமாம் இவன்: ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்? அவன்: ஆமாம் இவன்: இயல்பான மரணம்? அவன்: ….. இவன்: இந்தியர்? அவன்: இல்லை இவன்: கிபி? அவன்:… Continue reading

201. Memories of My Melancholy Whores

by

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்ற அதிவுன்னத கதைசொல்லியின் இன்னொரு புத்தகம். அவரின் கடைசி புதினம் என நினைக்கிறேன். தனது 90வது பிறந்தநாளைக் கன்னி கழியாத ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு கொண்டாட விரும்பும், பெயர் சொல்லப்படாத ஒரு பத்திரிக்கையாளனின் கதையிது. விபச்சாரத்தை ஊக்குவிக்கும் புத்தகம் என… Continue reading

196. சம்ஸ்காரா

by

யு.ஆர்.அனந்தமூர்த்தி. கன்னட மொழிக்கு ஒரு ஞானபீட விருது வாங்கித் தந்தவர். தற்போதைய இந்தியப் பிரதமர் முதன்முதலில் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, இந்நாடே அழிவுப்பாதையில் பயணிக்கும் என்று கடுமையாக விமர்சித்தவர். அவர் பிரதமரான பின், அவரின் பக்தர்கள் இவரைப் பாகிஸ்தான் போகச்சொல்லி ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பினர். நான்… Continue reading

194. The Autumn of the Patriarch

by

இவ்வளவு கடினப்பட்டு வேறெந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை. இதைப் படிக்க தற்போதைய அறிவு போதாதென்று தாழ்வுணர்ச்சி தென்பட, இரண்டு முறை பாதியிலேயே வேறெந்த புத்தகத்தையும் நிறுத்தி வைத்ததில்லை. இதில் சொல்லப்படும் கருத்துகளை நிகழ்கால மனிதர்கள் சிலர் மேல் எப்போதும் பொருத்திப் பார்த்து பார்த்து, அவர்கள் மேல்… Continue reading

190. பொன்னியின் செல்வன்

by

மாதொருபாகன் என்று தொடங்கிய பாரம்பரியம், பிறகு வள்ளுவன் சிலை, பெரியார் சிலை, தமிழை ஆண்டாள், சபரிமலை அய்யப்பன் என்று வரிசையாக தொட்டுத் தொடர்ந்து இன்று வந்து நிற்குமிடம் இராசராச சோழன். கிருமி ஒன்றுதான். தாக்கப்படும் உடற்பாகங்கள் தான் வேறு. கடந்தகால மருந்துகளை மறந்து கொண்டே சமூகம்… Continue reading

183. தோட்டியின் மகன்

by

1947ல் மலையாளத்தில் எழுதப்பட்ட புதினம் இது. புத்தகத்தின் பின்னட்டை சொல்வது போல, அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் – சேரி; கேட்காத மொழி – பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை – மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com