235. கந்தர்வன் கதைகள்

கந்தர்வன் என்பவரின் சிறுகதைகளைப் படித்தேன், அவரின் அனைத்துச் சிறுகதைகளையும் படிக்கப் போகிறேன் என்று இதே தளத்தில் சொல்லியிருந்தேன். அறுபத்தியொரு கதைகளையும் படித்துவிட்டேன். எந்தக் கதையிலும் புனைவு இல்லை; வார்த்தை ஜாலங்கள் இல்லை; ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அந்தரங்க வேலைகள் இல்லை; கெட்ட வார்த்தைகள் அறவே இல்லை. எளிய மொழியில் அற்புதமான கதைகள். சீவன், மங்கலநாதர், பக்கிரி, துண்டு, ஆம்பிளை, கதைதேசம் போன்ற கதைகள் எனது விருப்பங்கள். படித்துப் பாருங்கள்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: கந்தர்வன் கதைகள்
தொகுப்பு: பவா செல்லதுரை
வெளியீடு: வம்சி பதிப்பகம்
முதல் ஈடு: ஆகஸ்ட் 2005
பக்கங்கள்: 696
விலை: ரூபாய் 650
வாங்கிய இடம்: இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி நண்பன் சேரலாதன் அனுப்பி வைத்தான்
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)