236. பேட்டை

பேட்டை. சிந்தாதிரிப்பேட்டை. சின்னதறிப்பேட்டையில் ரூபன் என்ற கதைநாயகனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே இப்புதினம். இது மத்திய சென்னையின் கதை. அரசியல் சினிமா ரவுடியிசம் என்ற வழக்கமான சென்னை கதையில்லை. கேரம், கானாப்பாட்டு, ஹவுஸிங் யூனிட், அவ்வளவு கெட்ட வார்த்தைகள் என்ற வழக்கமான சென்னை சமாச்சாரங்களும் உண்டு. துளியும் விரசமில்லை. தவுடாசோறு, (சார்பட்டா பரம்பரை) டாடி என சில வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் உண்டு. ரூபனின் அலுவலகம் தொடர்பான பகுதிகளும், வாசிப்பில் சோர்வடையச் செய்யும் இவாஞ்சலின் என்ற கதாப்பாத்திரமும் இல்லையெனில் என்றோ படித்து முடித்திருப்பேன். 32ம் பக்கத்தில் வாக்கிய பிழையைக் கண்டதும், ஒரு தவறான புதினமோ என்ற சந்தேகத்துடன் தான் படித்தேன். படித்து முடித்தபின் சில விடயங்களில் உடன்பாடு இல்லாவிடினும், நல்ல வாசிப்பனுபவம் தரும் புதினம் இது. நகோமியம்மா ரெஜினா பாஸ்டரய்யா எபினேசர் கதைகளை மட்டும் தனியாகவோ, அல்லது பூபாலன் கதையை மட்டும் இன்னும் ஆழமாகவோ சொல்லியிருந்தால் நீண்ட காலம் நினைவில் நிற்கும் ஒரு நல்ல புதினமாக அமைந்திருக்கும்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பேட்டை
ஆசிரியர்: தமிழ்ப்பிரபா
வெளியீடு: காலச்சுவடு
முதல் ஈடு: டிசம்பர் 2017
பக்கங்கள்: 350
விலை: ரூபாய் 390
வாங்கிய இடம்: இந்த வருட புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)