244. செவியன்

வேலைக்காக சிங்கப்பூர் வந்து ஐந்து மாதங்கள் ஆகப்போகிறது. கிட்டதட்ட எல்லா மதங்களின் தலங்களுக்கும் போய்விட்டேன். இத்தீவில் ஆர்ப்பரிக்கும் கடல் கிடையாது. திரையரங்குகள் நுலகங்கள் மட்டுமே விடுமுறை நாட்களில் இச்சிறிய நாட்டில் என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் என உணர்ந்தேன். இதுவரை 15 நூலகங்களில் விடுமுறை நாட்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். நான் படித்த சில கவிதைப் புத்தகங்கள் வழக்கம்போல் ஒட்டவேயில்லை. இரண்டு கதைகளைக் கூட ஒரு சிறுகதைத் தொகுப்பில் கடக்க முடியவில்லை. இரண்டு புதினங்களைப் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். இவற்றில் சில விருது பெற்ற புத்தகங்கள். இப்போதுதான் கொஞ்சம் தெளிவாகி, வரிசையாக சில நல்ல புத்தகங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சிங்கப்பூர் நூலகத்தில் அமர்ந்து முழுமையாக படித்து முடித்த முதல் புத்தகம் இது. நாமக்கல் வட்டார வழக்கில் அமைந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு இது. நல்ல கதைகள். படித்துப் பாருங்கள்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: செவியன்
ஆசிரியர்: இரா.பிரபாகர்
வெளியீடு: நம் பதிப்பகம்
முதல் ஈடு: டிசம்பர் 2022
பக்கங்கள்: 140
விலை: ரூபாய் 180
எடுத்து படித்த இடம்: Woodlands நூலகம், சிங்கப்பூர்
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)