230. பிரபல கொலை வழக்குகள்

செய்திகளை இணையத்தில் மட்டுமே படிக்கும் வழக்கம் உடையவன் நான். ஊரடங்கு காலத்தில் செய்திகளைத் தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்கிறேன். ஒருநாள் தாமதமாக வந்தாலும், செய்தித்தாள்களில் உள்ள செய்திகள் பெரும்பாலும் முழுமையற்ற தகவல்களுடன் தான் வருகின்றன. சென்ற வாரம் தீர்ப்பான உத்ரா கொலை வழக்கு ஓர் உதாரணம். அறிவியல் பூர்வமாக காவல்துறை அவ்வழக்கை அணுகியதைக் காட்சி ஊடகங்கள் எல்லாம் பாராட்ட, மறுநாள் செய்தித்தாள்கள் அதை இன்னொரு கணவன் இன்னொரு மனைவிக்காக செய்த கொலையாக, ஒரு சாதாரண செய்தியாகச் சொல்லின.

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலைவழக்கின் தீர்ப்பு வந்தபின், இப்புத்தகம் கண்ணில்பட்டது. முதல் பாகத்தில் அட்டைப் படத்தில் இருந்த அனைத்து வழக்குகளும் தெரிந்திருந்ததால், படங்கள் இல்லாத இரண்டாம் பாகம் வாங்கினேன். ஆட்டோ சங்கர், நாவரசு வழக்குகள் ஏற்கனவே தெரியும். பில்லா ரங்கா எனக்குப் புதிது. ஆசிரியர் வழக்கறிஞர். இவரின் ‘மதுரை சுல்தான்கள்’ புத்தகத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். இதையும் படித்துப் பாருங்கள்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)
ஆசிரியர்: SP. சொக்கலிங்கம்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
முதல் ஈடு: நவம்பர் 2020
பக்கங்கள்: 128
விலை: 140 ரூபாய்
வாங்கிய இடம்: http://www.noolulagam.com/
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)