237. காலச்சக்கரம்


புத்தகம்: காலச்சக்கரம்
ஆசிரியர்: காலச்சக்கரம் நரசிம்மா
வாசித்த இடம்: Kindle Unlimited


நண்பனின் பரிந்துரையின் பேரில் வாசித்த புத்தகம். விறுவறுப்புக்குப் பஞ்சமில்லாமல் பரபரவென்று நகரும் கதை. சில மணிநேரங்களில் படித்து முடித்துவிடலாம். இப்புத்தகத்தின் வெற்றியே ஆசிரியருக்கு அடைமொழியாகியது. அவரின் கடின உழைப்பு அங்கங்கே பளிச்சிடுகிறது. பற்பல இடங்களில் பல காலகட்டங்களில் நடைபெறும் கதை ஒரு மையச்சரடில் வந்து இணைகிறது. என்னதான் ஒரு கதையாக சிறப்பாக அமைந்தாலும், என்னால் சுத்தமாக இந்த புத்தகம் முன்வைக்கும் கருத்துகளுடன் உடன்பட முடியவில்லை. இந்தியாவின் பலபகுதிகளில் நடைபெறும் கதை சொல்லி வைத்த மாதிரி எல்லா ஊரிலும் அக்ரகாரத்தில்தான் நடைபெறுகிறது. இந்தியாவே அக்ரகாரங்களால் நிறைந்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தை முன்வைக்கிறது. பில்லி சூனியம் மந்திர தந்திரங்கள் ஏவல் தேவதைகள் என அறிவுக்கு ஒவ்வாத பல விஷயங்கள் பக்கங்கள்தோரும். அதையும் அறிவியல் போன்ற தோற்றத்தில் படைத்திருப்பது எனக்கு உறுத்தியது. வாட்ஸப் யுனிவர்சிடிக்கு நிறைய கன்டெட் கிடைக்கும் இந்த புத்தகத்தில். இப்படி எதிர் துருவத்திலிருந்து வாசிக்கத் தொடங்கிய நானே கடைசிவரை படிக்கும்படி செய்ததுதான் ஆசிரியரின் வெற்றி.